ஏற்ற சமயத்தில் நமக்கு உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், துணிவுடன் கிருபாசனத்தண்டையிலே சேர்ந்து, இரக்கம், கிருபை, பெறுவதற்கு ஜெபமானது ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கும், அவசியமானது. வெறும் வார்த்தைகளினால் தேவனிடத்தில் பேசுவது என்பது ஜெபமாகாது. நம்முடைய உணர்வுகளையும், விருப்பங்களையும், இதயபூர்வமாக, ஆவியில் இணைந்து, தேவனிடத்தில் பேசுவதே ஜெபமாகும். “ஜெபம்” என்ற இந்த புத்தகத்தின் வாயிலாக ஜெபத்தை பற்றியும், அதன் வல்லமை, சலுகைகள், நோக்கம், அதன் அவசியம், ஜெபம் செய்யும் விதம், யார் ஜெபத்தில் தேவனிடம் உறவாட முடியும் என்பதையும், ஜெபத்தின் முறைகள் பற்றியும், மேலும் பல கோணங்களில் ஜெபத்தை குறித்ததான அனேக ஆழமான விளக்கங்களையும், ஏற்பாட்டையும் இந்த புத்தகத்தில் காணமுடிகிறது.
இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம். தேவன் நம்முடைய சார்பாக எல்லாம் முன்னேற்பாடுகளையும் செய்து இருப்பதையும், ஏற்ற காலத்தில் இந்த ஜெபத்தின் வாயிலாக தேவனிடத்திலும், கர்த்தரிடத்திலும் நெருங்கி இருத்தல் என்பது தேவனின் சுத்த கிருபையே. ஜெபத்தில், தேவனுடன் ஒன்றித்து இருக்கும்போது, நமக்கு விரோதமாய் இருப்பவன் யார்?. எத்தகைய ஆசீர்வாதங்கள். ஜெபத்தின் நுணுக்கங்களை அறிந்து, நம்மை மெருகேற்ற “ஜெபம்” என்ற இந்த புத்தகத்தின் வாயிலாக, கிருபை தந்த தேவனுக்கு, ஸ்தோத்திரம்.
Reviews
There are no reviews yet.