“அன்பில்லாதவன் தேவனை அறியான்,…” (1 யோவான் 4:8) ஆம் சர்வ வல்லவரே அறியும், அறிவிற்கு அடிப்படையே அன்பு தான். கர்த்தர் இயேசுவில் நாம் நிலைத்திருக்கிறோம் என்பதின் அடையாளமே, அன்புதான். உலக ஜனத்தின் மத்தியில், ஒளிரும் தீபமாக இருக்க செய்வதும், இந்த அன்புதான். நமது பந்தயப் பொருளே, அகாபே அன்புதான்.
கிறிஸ்துவின் பள்ளியில் பயின்று வரும் நமக்கு, குணங்களை அன்பின் அடிப்படையில் பெற்றிருந்தால் மட்டுமே, அன்பை புரிந்துகொள்ள முடியும். இத்தகைய அன்பை “அன்பு” என்ற தலைப்பின் கீழான புத்தகத்தின் வாயிலாக தியானிப்பதால், கிறிஸ்துவின் சாயலில் ஒளியாக இருக்க உதவுகிறது. இந்த புத்தகத்தில் அன்பின் தன்மைகளும், அன்பின் படி நிலைமைகளும், அவற்றை அடையும் வழிகளும், பரிசுத்த ஆவியின் முத்திரையின் அடையாளமான அன்பைப் பற்றியும், சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணமான – அன்பைப் பற்றியும், அன்பிற்கும் நீதிக்கும் இடையேயான உறவைப் பற்றியும், அகாப்பே அன்பை அடைந்து இருக்கும் போது நாம் காட்டும் பக்தி வைராக்கியம் மற்றும் அன்பில் பயமில்லாத தன்மை பற்றியும், மேலும், பல ஆழமான அன்பின் வியாக்கியானம் தருவதாக, இந்த புத்தகம் உள்ளது. கிறிஸ்தவன் என்று கூறும் எவரும், இப்புத்தகத்தை தியானித்து கடைப்பிடிக்கும் போது, விரைவில் மகிமையை அடைய, இந்த புத்தகம் வழி செய்கிறது.
Reviews
There are no reviews yet.