நமக்குள் இரகசியமாக இருக்கும் அரக்கர்களில் ஒருவன் பெயர் “பொறாமை” ஆகும். புதுச்சிருஷ்டியின் ஜீவியம் ஒன்றுமில்லாமல் போகச்செய்வதற்கு இவனுக்கும் வல்லமை உண்டு. அவனைப்பற்றி நாம் பெரும்பாலும் வெளிப்படையாக பேசுவதில்லை. மேலும் பெரும்பாலானவர்கள், அவனை தங்களுக்குள் தெரியாமல் வளரவிட்டு, பிற்பாடு அவனுடைய நாசவேலைகளைக் கண்டு அவனை எவ்வாறு ஜெயங்கொள்வது என்று தெரியாமல் முழித்துத் கொண்டிருக்கின்றனர்.
கவலை வேண்டாம் பிரியமானவர்களே. தேவன் நல்லவர். நமக்கான ஏற்ற ஔஷதத்தை வழங்குபவர் அவரே. அயல்நாட்டு அன்பு சகோதரி.பெக்கா அவர்கள் தான் பொறாமைக்கொண்ட வாழ்க்கை தருணங்களையும், அதனை எவ்வாறெல்லாம் மேற்கொண்டார் என்பதையும் இக்கட்டுரையில் பகிர்ந்துள்ளார். மேலும், வேதம் கூறும் / விரும்பும் “Jealous” பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக, அவ்வரக்கனை மேற்கொள்ள தங்களுக்கு உதவும் என தேவ நம்பிக்கையில் தங்கள் தியானத்திற்கு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுமாறு தாழ்மையுடன் சமர்ப்பிக்கின்றோம்.
Reviews
There are no reviews yet.