நமது கர்த்தர் இப்பூமியில் வாழ்ந்த இறுதித் தருணங்கள் மிகவும் பயங்கரமானவையாக இருந்தன.
இப்பாடத்தில், நமது இரட்சகருடைய இறுதி மணிநேரங்களில் அவரும், அவரைச் சுற்றி இருந்த கதாபாத்திரங்களும் எப்படிக் காணப்பட்டார்கள் என்பது பற்றியும், ஏன் சில விசாரணைகள் சட்டவிரோதமென வகைப்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும், எவ்வாறெல்லாம் கர்த்தருக்கு நீதி மறுக்கப்பட்டது குறித்தும், நுணுக்கமான கோணத்தில், காரண காரிய அடிப்படையில், விளக்கப்பட்டுள்ளது.
விசேஷமாக, கர்த்தருடைய இறுதி இரவன்று அப்போஸ்தலர்களோ நித்திரைப்பண்ணிக்கொண்டிருந்தார்கள்… ஆனால் எதிராளியாகிய பிசாசும், அவனது மனித கருவிகளும் விழிந்திருந்து தீவிரமாகவும் துரிதமாகவும் வேலைசெய்துகொண்டிருந்தார்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணின கர்த்தர்தான் வெற்றிச்சிறந்தார் என்பதை இப்பாடமானது நமக்கு நினைப்பூட்டுகின்றது.
எக்காலத்தைக்காட்டிலும் இக்கடைசிக் காலக்கட்டத்தில் வாழும் நமக்குப் பின்வரும் வசனத்தைக் கவனமாகப் பின்பற்றிடுவதற்கு இப்பாடமானது எச்சரிக்கையான ஒன்றாக அமைகின்றது.
🔥 மத்தேயு 26:41 – “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” என்றார்.
கூடுதலாக, இறுதித் தருணங்கள் குறித்த ஒருங்கிணைக்கப்பட்ட வேதவாக்கிய குறிப்புகளை வாசகரின் நன்மைக்காக காலவரிசைப்படி வரிசையும்படுத்தப்பட்டுள்ளன.
அனைவரும் படித்து பயன்பெறும்வகையில், புரிதலுக்கான புகைப்படங்களும், முக்கியமான குறிப்புகளும் சேர்க்கப்பட்டு இப்புத்தகத்தை ஜெபத்துடன் தாழ்மையாகப் பகிர்ந்துகொள்கிறோம் பிரியமானவர்களே! நன்றி!
Reviews
There are no reviews yet.